கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

Photo of author

By Kowsalya

கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அன்றாட உணவு முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடல் நலம் பெறலாம்.

இப்பொழுது நமது ரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பை நீக்குவதற்கு இயற்கையான முறையை பயன்படுத்த போகிறோம். அது என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்!.

தேவையான பொருட்கள்:

1. கெட்டி தயிர் 2 ஸ்பூன்

2. வெந்தயம் ஒரு ஸ்பூன்

3. சீரகம் ஒரு ஸ்பூன்

4. மிளகு 10

5. உப்பு தேவையான அளவு

6. மஞ்சள் கால் டீஸ்பூன்

7. வெள்ளை பூண்டு 2 பல்

8. கருவேப்பிலை தேவையான அளவு

9. இஞ்சி கால் துண்டு

செய்முறை:

1. முதலில் ஒரு டம்ளரில் இரண்டு ஸ்பூன் அளவு கெட்டி தயிர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

2. இந்த தண்ணீரை இரவு முழுவதும் மூடி வைத்து விடவும். இது நன்றாக புளிக்க வேண்டும்.

3. அடுத்த நாள் காலையில் உரலில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்றாகப் பொடியாக இடித்து கொள்ளவும்.

4. அந்த பொடியை மோர்க் கலவையில் சேர்க்கவும்.

5. பின் அதே உரலில் 2 பல் பூண்டு, தோல் நீக்கிய கால் துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து கருவேப்பிலை இலைகளை போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.

6. அந்த கலவையை மோரில் சேர்த்து கலக்கவும்.

7. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

8. பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

9. அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1. இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் குடிக்கலாம்.

2. சாப்பிடுவதற்கு முன் சாப்பிடுவதற்குப் பின் என அனைத்து நேரங்களிலும் குடிக்கலாம்.

3. இதை நீங்கள் தொடர்ந்து குடிக்கலாம். தொடர்ந்து குடித்து வரும் பொழுது எடை இழந்திருப்பதை நீங்கள் காண முடியும்.

4. டயட் இருப்பவர்கள் இந்த முறையை உங்களது உணவில் கூட தினமும் சேர்த்து கொள்ளலாம்.