மூட்டு வலி குடைச்சல் கை கால் முடக்கம் குணமாக வாதநாராயணன் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

மூட்டு வலி குடைச்சல் கை கால் முடக்கம் குணமாக வாதநாராயணன் இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

தீராத மூட்டு வலி,கை கால் குடைச்சல் முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

1.மூட்டு வலி

தேவையான பொருட்கள்:-

1)வாதநாராயணன் இலை
2)நீர்

செய்முறை:-

ஒரு கப் வாதநாராயணன் இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.இந்த நீரை மூட்டு பகுதியில் ஸ்ப்ரே செய்து விடவும்.பின்னர் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.இவ்வாறு தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் செய்வதினால் மூட்டு வலியில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்.

2.கை கால் முடக்கம்

தேவையான பொருட்கள்:-

1)வாதநாராயணன் இலை
2)மஞ்சள் தூள்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் அளவு வாதநாராயணன் இலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.பிறகு இந்த பேஸ்ட்டை கை,கால்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் கை கால் முடக்கம் முழுமையாக குணமாகும்.

3.கை கால்,மூட்டு குடைச்சல்

தேவையான பொருட்கள்:-

1)வாதநாராயணன் இலை
2)புளி
3)உப்பு
4)உளுந்து பருப்பு
5)கடலை பருப்பு
6)சின்ன வெங்காயம்
7)கறிவேப்பிலை
8)நல்லெண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி உளுந்து பருப்பு,1/4 தேக்கரண்டி கடலை பருப்பு போட்டு பொரிய விடவும்.

அதன் பின்னர் 4 தோல் நீக்கிய சின்ன வெங்காயம்,ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.பிறகு ஒரு கப் வாதநாராயணன் இலையை போட்டு பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கவும்.

பின்னர் இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு சிறிது புளி,தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய்ய அரைத்தால் கை கால்,மூட்டு குடைச்சலை குணமாக்கும் வாதநாராயணன் இலை துவையல் தயார். வாரத்திற்கு இருமுறை இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உரிய பலன் கிடைக்கும்.