என்னது ஆதார் அட்டையை வைத்து பணம் வாங்கலாமா? இதை செய்தால் மட்டும் போதும்!

Photo of author

By Sakthi

ஆதார் அட்டை என்பது இந்தியர்கள் எல்லோருக்குமே மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை பணம் சார்ந்த அனேக விஷயங்களில் இது பயன்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இன்னமும் சிலருக்கு இந்த ஆதார் அட்டையை வைத்து கடன் வாங்கலாம் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது.

நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலமாகவே கடன் வழங்குகிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், உள்ளிட்டவைகள் ஆதார் அட்டையை வைத்து கடன் வழங்குகின்றன.

ஆதார் அட்டை இருக்கும் எல்லோருக்கும் கடன் கிடைத்து விடாது, அவர்களுடைய கிரெடிட் ஸ்கோரை பொறுத்தே கடன் வழங்கப்படும்.

வங்கிக்குச் சென்று கடனுக்காக விண்ணப்பம் செய்யும் போதோ அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும்போதோ அந்த நபரின் பான் விவரங்களை வைத்து கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்று வங்கிகள் சரிபார்க்கும்.

ஒருவேளை அது குறைவாக இருந்தாலும் அல்லது இதற்கு முன்னர் திருப்பி செலுத்தாமல் பிரச்சனை உண்டாகி இருந்தாலும் கடன் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் ஆதார் அட்டையை வைத்து மிகவும் சுலபமான முறையில் கடன் பெற்று விடலாம். எந்த வங்கியில் கடன் வாங்க நினைக்கிறீர்களோ அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது செயலியிலும் சென்று விண்ணப்பம் செய்யலாம். ஆதார் அட்டை விவரங்களை அதில் வழங்க வேண்டியிருக்கும், அதேபோல பான் அட்டையும் தேவைப்படும்.