ராஜபோகம்

Photo of author

By Kowsalya

ராஜபோகம்

முதலில் எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே இட்டிலியும் தோசையும் காண முடியும்.

எங்க வீட்ல இட்லி செஞ்சிருக்காங்க என பக்கத்து வீட்டு சிறுவர்களை அழைத்து சாப்பிடச் சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் இட்லி,தோசை என்பது.

 

அன்றைய காலத்தில் சாதாரண மக்களின் உணவானது வரகு, தினை, கம்பஞ்சோறு, கேழ்வரகு போன்ற தானியங்களின் கஞ்சி மட்டுமே . அரிசி சோறு என்பது ராஜபோகத்தில் ஒன்று. ராஜபோகம் என்றால் மன்னர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவாக இருந்தது.

 

நெய், வெண்ணை போன்றவை பணக்காரர்களிடம், ஆடு மாடு வைத்திருந்த மக்களிடம் மட்டும் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை காசு கொடுத்தால் யாரும் வேண்டாம் வாங்கி சாப்பிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

சோழ நாடு சோறுடைத்து என்பது போய் இன்று சோறுடைத்து என்ற நிலை வந்துள்ளது.. சமூக மாற்றத்தால் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கபட்டதோடு அறிவியலும் விஞ்ஞானமும் இணைந்து இன்று சிறு விவசாயிகள் தங்கள் தேவைகள் போக சந்தைக்கு ஓய் காய்கறிகளை விற்கின்றனர். இதனால் விவசாய முறையும், உணவு தானியமும் அனைத்துத் மக்களிடம் சென்றடைந்துள்ளது எனவே கூறலாம்.

 

இது உற்பத்தி மட்டும் ஏற்றம் கொள்ளவில்லை. சமூகத்தில் சமத்துவ உணர்ச்சியும் ஏற்றத்தைக் கொண்டுள்ளது.

 

உற்பத்தி அதிகம் பெற்று உள்ளோம் என்று சந்தோஷப்பட்டாலும் இயற்கைக்கு ஆரோக்கியமான உற்பத்தி முறையையும், உண்ணுபவருக்கு ஆரோக்கியமான தானியத்தையும் உற்பத்தி செய்யத் தவறியுள்ளோம்.

 

மிக அதிகமான இராசயன உரங்கள், மரபணு மாற்று விதைகள் என கொண்டு வந்து இயற்கைக்கு எதிரான முறைகளில் விவசாயம் செய்கிறோம். இப்படி விளைகின்ற உணவு தானியங்கள் மனித பசியைப் போக்கினாலும் அதிகமான புது நோய்களை உருவாக்குகின்றன.

 

நம் உணவு சரியாக இல்லாவிடில் கொரோனாவை விட பயங்கரமான வியாதிகள் வரும். அதை நாம் எதிர்கொள்ள காத்திருக்க வேண்டும்.இயற்கைக்குப் புறம்பானதாக எதையும் செய்தாலும் அது நம்மிடமே வந்து சேரும்.