டெலிவரி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் பிரசவத் தழும்புகள் மறையவில்லையா?? இதோ போக்கும் பயனுள்ள குறிப்புகள்!
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், உடல் பருமனாக இருந்து ஒல்லியாக மாறினாலும் இது போன்ற தழும்புகள் உண்டாகும். ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை வளர வளர வயிற்று பகுதி நன்கு விரிவடையும். பின்னர் குழந்தை பிறந்த பிறகு பழைய நிலைக்கு வரும்போது, வயிற்று பகுதி சுருங்கி ஆங்காங்கே தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.
எப்போது சருமத்தில் ஒரு பிரச்சினை என்றால் அது சரியாவதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு ஆகும். அதனால் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக சரி செய்ய முடியாது. பிரசவத்திற்கு பின் உண்டாகும் தழும்புகளை போக்கும் வழிகளை பார்ப்போம்.
கடைகளில் கிடைக்கும் உலர்ந்த அல்லது புதிதான ஆப்ரிகாட்டை வாங்கி, அதன் விதைகளை நீக்கி விட்டு, அதனுடைய சதைப் பகுதியை நன்றாக மசித்து, பிறகு தழும்புகளின் மீது தடவ வேண்டும். ஆப்ரிகாட் எண்ணெய் அல்லது எசன்ஸ் கிடைத்தாலும் தழும்புகளை சுற்றி தடவலாம். 15 நிமிடம் ஊறவிட்டு பின்னர் கழுவி விடவும்.
இதற்கு கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல் எடுத்து பிரசவ தழும்புகள், சிசேரியன் தழும்புகள் மீது தடவி விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விட்டு அந்த இடத்தில் பேபி லோஷன் தடவவும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் தழும்புகள் முற்றிலுமாக மறைந்து விடும். கடைகளில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் அதிக கவனம் கொள்ளவும்.