உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Photo of author

By CineDesk

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

CineDesk

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு காலை 11 மணிக்கு நித்யா வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை4.30 மணிக்கு பள்ளி வேலைகள் முடியும் நேரம். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஹன்சிகா வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் கதவில் இருந்த பூட்டை உடைக்கப்பட்ட கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஹன்சிகா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டாள். உடனே ஹன்சிகா வீட்டில் இருந்த செல்போனை எடுத்து தனது தாய் நித்தியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியான செய்தியை கேட்ட உடனே வித்யாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை வீட்டிற்கு விரைந்து வந்தான். அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 81/2 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 4 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றில் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசில் நித்தியா புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரஜினி மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவாசல் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் இரண்டு வாலிபர்கள் வீட்டில் சில நாட்களாக கண்காணிப்பதாக தெரிய வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்கும் புகுந்து நகை, பணத்தை கொள்ளை அடித்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.

இருவரும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முகமூடி மட்டுமே ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பகல் பட்ட பகலில் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய முகமூடி கொள்ளைக்காரர்கள் வலைவீசி இருவரையும் தேடி வருகிறார்கள். தலைவாசல் பகுதியில் பட்டப் பகலில் நடந்த கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.