உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!!
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கயிருக்கிறது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை கவர் செய்வதற்கு பல பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள்.அதை கண்டுபிடிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பறக்கும் படையினரை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில் அதிக கண்காணிப்புகள் வைத்தும் இன்றைய கால கட்டத்தில் போன் பே மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை ஓரிரு நிமிடங்களுக்குள் பரிவர்த்தணை செய்து விடுவார்கள்.இத்தகைய காரணத்தினால் தமிழக தேர்தல் அதிகாரி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியது,மக்களின் வாக்குகளை கவர்வதற்கு லஞ்சமாக பணம் கொடுக்கப்படும்.அந்த பணமானது கூகுள் பே,போன் பே மூலம் செலுத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது.
அதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் கண்காணிப்பு பார்வையாளர்கள் இரண்டு பேரை நியமனம் செய்துள்ளோம்.அவர்கள் திங்கட்கிழமை அன்று தமிழகம் வருவதாக தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.வேட்பாளர்களின் வங்கிகளின் பண பரிவர்த்தனையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதனையடுத்து வாகன சோதனையில் பணம் மற்றும் பரிசு பொருட்களாக ரூ.15.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டதையும் கூறினார்.
இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் புதிய கண்காணிபாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரவித்தார்.இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலுள்ள குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நபர்களுக்கு கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பும் வங்கி கணக்குகளை கண்காணிப்பார்கள் எனக் கூறினார்.அதுதொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் மக்கள் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.