ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!

Photo of author

By Divya

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!

உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டு செல்வத்தை குவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஒரு சிறிய விபூதி பாக்கெட் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை காலை அதை ஒரு சிறிய பித்தளைத் தட்டு அல்லது மண் அகலில் பரப்பி வைக்கவும். அதில் சிறிது பச்சைக் கற்பூரம், சிறிது ஜவ்வாது கலக்கவும்.

பின்பு அதில் “777” என்ற எண்ணை உங்கள் ஆள்காட்டி விரலால் எழுதவும். இந்த தேவதை எண்ணை எழுதும் போது ஏழு – ஏழு – ஏழு என்று சொல்லிக் கொண்டே எழுதவும். எழுதியவுடன் தட்டை வைத்து விட்டு “டிவைன் மேஜிக் பிகின்ஸ் நெள” என்று 21 முறை சொல்லவும்.

பின்பு உங்கள் ஆள்காட்டி விரலில் ஒட்டி இருக்கும் விபூதியை உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு உங்கள் முன்னேற்றத்திற்கும் செல்வ வளத்திற்கும் மனதார வேண்டிக் கொண்டு உங்கள் வேலைகளைத் தொடங்கவும்.

தினமும் இதே போல் அதே விபூதியை கலைத்து அதில் 777 என்று எழுதி விபூதியை இட்டுக் கொள்ளவும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் கண் கூடாக பார்க்க முடியும்.