இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இங்கு மக்கள் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இதன் காரணமாக உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களை குறைத்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் நான்கு பேருக்கான ரேஷன் அட்டைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும், ஒரே ஒரு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற சலுகைகளை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் ஜூலை 19ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.