SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது.
மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம் :-
SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை நிரப்பவும் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளில் உள்ள கிரெடிட், ஆடிட், forex போன்ற காலி பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரெடிட், ஆடிட் மற்றும் ஃபாரக்ஸ் போன்ற பணிகளுக்கு பின்னணியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர்களுக்கு ஓராண்டு கால பணி நிர்ணயம் என்றும் அந்த ஓராண்டுக்கு 30 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம் :-
✓ MMGS III -ல் ஓய்வு பெற்றவர் – ரூ.45,000
✓ SMGS -IV ல் ஓய்வு பெற்றவர் – ரூ.50,000
✓ SMGS-V ஓய்வு பெற்றவர் – ரூ.65,000
✓ TEGS – VI ஓய்வு பெற்றவர் – ரூ.80,000
விண்ணப்ப முறை :-
✓ https://bank.sbi/careers
✓https://www.sbi.co.in/careers
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விளைவிக்கும் பொழுது கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.