காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!
டெல்லி : பிரதமர் மோடியை அவதூறு கூறிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது மற்றும் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். லோக்சபா வில் திமுக எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து அவர்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைதண்டனை வழங்கியது. பின்னர் ஒரு மாதம் ஜாமீன் வழங்கி அதற்குள் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மக்களின் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டது பின்னர் வயநாடு தொகுதி காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து காங்கிரஸ் எம்பி பன்னீர் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
விசிக திருமாவளவன் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 1860 ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 2 வது வழக்கு ராகுல் காந்தி வழக்காகும். மற்றும் ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சு வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றது குறித்து பேசியதாவது, நீங்கள் கை வைத்திருப்பது ராகுல் காந்தி மீது அல்ல இந்திய ஜனநாயகத்தின் மீது. உங்கள் அருமை நண்பர் அதானியை பாதுகாக்கும் வகையில் அவருடன் சேர்ந்து கூட்டுக்களவை செய்கிறீர்கள் என்று மக்கள் அறிவார்கள். ராகுல் காந்தி மீது ஏற்படுத்தும் பதவி நீக்கத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.