டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

0
229
#image_title

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது, இந்த தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே வார்த்தை போர் தொடங்கியது.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சையான வகையில் பேசியது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி பாஜக மேலிடம் அண்ணாமலையை அழைத்து சில கருத்துக்களை சொல்லி இருப்பதாகவும், அதற்கு தகுந்தாற்போல, அண்ணாமலை கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்தாலும், கூண்டிற்குள் எத்தனை நாள் அடைபட்டு கிடப்பது, அதிலிருந்து வெளியேறி சிறகடித்து பறந்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் பாஜக தேசிய தலைவர்கள் அதுவும் குறிப்பாக அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அவரை சந்தித்து, தமிழக பாஜக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள், கூட்டணி உடையும் நிலை குறித்து பேச உள்ளதாகவும், கூறப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை பேசியது குறித்து எடப்பாடி பேசுவார் என தெரிகிறது.

தமிழக அளவில் திமுகவுக்கு போட்டியாக பெரிய கட்சி என்ற அடிப்படையில் பாஜக தங்களை மதிக்க வேண்டும், தரம் குறைந்து பேசுவதை நிறுத்த வேண்டும், மாநிலத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும், தங்களுக்கு ஆதரவாக ஒரு தேசிய கட்சி இருக்க வேண்டும், அந்த வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை, எனவே பாஜகவுடன் அதுவும் டெல்லி மேலிடத்தில் நல்ல நட்பு தொடர்வதால் அதை இழக்க எடப்பாடி விரும்பவில்லை.

இதனை தொடர்ந்து அதிமுகவில் தற்போது பூதாகரமாக உள்ள பொது செயலாளர் பதவி தொடர்பான தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு குறித்து, அமித்ஷாவுடன் எடப்பாடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எடப்படியின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.