விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த வடிவேலு அவர்கள் திமுக மேடையில் விஜயகாந்தை பலவாறு வாய்க்கு வந்தபடி பேசிய நிகழ்வு ரசிகர்கள் மற்றும் மக்களிடையே வடிவேலுவிற்கு கெட்ட பெயர் உருவாக்க காரணமாக அமைந்தது.
தனக்கு வாழ்வு கொடுத்த ஒருவரை அரசியலுக்காக மேடை ஏறி அசிங்கப்படுத்துவது என்பது சகிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ள நிலையில் மீண்டும் திமுக மேடை ஏறி நடிகர் மற்றும் கட்சி தலைவரான விஜய் அவர்களை எதிர்க்க வடிவேலு அவர்கள் துணிந்து இருக்கிறார்.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் கூறும் உண்மை :-
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் போட்டுக்க ஆடை கூட இல்லாமல் இருந்த வடிவேலுக்கு ஆடைகள் வாங்கி கொடுத்து தன்னுடன் அனைத்து படங்களிலும் நடிக்க வைத்து வளர்த்து விட்டவர் விஜயகாந்த். திமுகவிற்காக மேடை ஏறிய வடிவேலு காமெடியாக பேசினால் ஓட்டு அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் விஜயகாந்த் அவர்களை அநாகரீகமான வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தினார். அதன் பின்னர் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பல கெட்ட விமர்சனங்களை பெற்று திரை உலகை விட்டு வெளியேறி விட்டார்.
திமுகவின் பிரதான எதிரியான ஜெயலலிதா அம்மா அவர்களை நேரடியாக விமர்சித்தால் தன்னுடைய நிலை அவ்வளவுதான் என சிந்தித்த வடிவேலு அவர்கள் ஜெயலலிதா அம்மா அவர்களின் கூட்டணி கட்சியில் இருந்த விஜயகாந்த் அவர்களை குடிகாரன் என மட்டம் தட்டி மேடைகளில் பேசி இருந்தார். தன்னை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அவருக்கு நன்மையையும் செய்யும் வகையில் வடிவேலு அவர்கள் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த் என ப்ளூ சட்டை மாறனவர்கள் தெரிவித்திருக்கிறார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஓடி ஒளிந்து கொண்ட வடிவேல் அவர்கள் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது மட்டும் தன்னுடைய ஆதாயத்திற்காக மேடையை பேசுவதாக இவர் விமர்சித்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களின் உடைய ஓட்டுகளை பெற நினைக்கக்கூடிய திமுக அரசானது வடிவேலு அவர்களை மேடை ஏற்றி இருப்பது முரண்பாடான செயல் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது மீண்டும் திமுக மேடை ஏறி இருக்கக்கூடிய வடிவேலு அவர்கள் மத்திய அரசு குறித்தோ அல்லது நேரடியாக விஜய் அவர்களையோ விமர்சனம் செய்தால் அவருடைய முதலுக்கே பிரச்சனையாகிவிடும் என்பதால் தற்பொழுது வடிவேலு அவர்கள் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கூஜா தூக்கி அவரை புகழ்ந்து பேசி பொற்காசுகளை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான் என தெரிவித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.