தெற்கே “Go back Modi” வடக்கே “Well come Modi” வைகோவின் அரசியல்!

0
177

தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது “Go back Modi” என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் வடமாநிலம் சென்று மோடியை சந்திக்கும் பொழுது well come Modi என்று உச்சரிக்கின்றனர். இதுதான் அரசியல் சாணக்கிய தனமா? என்று வைகோவை பார்த்து H.ராஜா கேள்வி?

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் அத்வானியை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வைகோ வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு வைகோ தனது மனைவி, மகன் என குடும்பதினருடன் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர் அத்வானியுடன் சேர்ந்து அவரது இல்லத்தில் வைகோ தனது காலை உணவையும் உண்டார். 

இதற்கிடையே, அதிமுக மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

மாநிலங்களவை அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், ரத்தினவேல், லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர்கள் மூவரும் பதவியேற்க உள்ளனர். அதே போன்று அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

மேலும் படிக்க : வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.

இதை அடுத்து பிஜேபி மூத்த தலைவர் திரு H.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வைகோவை பார்த்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தென்மாநிலங்களில் வரும் பொழுது Go back Modi என்றும் வைகோ வட மாநிலம் செல்லும் பொழுது Well come Modi என்றும் அழைத்தார். இதுதான் வைகோவின் சானக்கிய அரசியலோ என பலர் வினவிவருகின்றனர்.

மேலும் படிக்க : கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? உச்சகட்ட பரபரப்பு!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஉணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!
Next articleமக்களே உஷார்! அனைத்தும் உங்களுடையது! இனி இப்படி செய்யாதீர்கள்.