“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

0
390

2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது.

 

இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் இரண்டாவது அலையும் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இப்பொழுது டெல்டா பிளஸ் என்ற ஒருவகை வைரஸ்கள் உருவெடுத்துள்ளது.

 

இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை மற்ற வைரஸ்களை விட விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதுவரை தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கோரொனா வகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாராட்டி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

கொரோனா வின் மூன்றாவது அலை முகம் காட்டாது என்ற வகையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

 

 

 

அதில், தடுப்பூசி கிடைத்தல், தயக்கத்தை உடைத்தல், தக்கவர்க்குச் செலுத்தல், தருணத்தில் முடித்தல், நான்கும் நடந்திடில் மூன்றாம் அலை முகம்காட்டாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதை ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

 

இதை பார்த்த சரியான நேரத்தில் சரியான பதிவு , மிகவும் நன்றி , உங்கள் தமிழ் இனிமை என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.

 

 

 

 

 

 

Previous articleயாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
Next articleகுழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here