குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

0
78
Couples Died due to Money Issue in Chennai
Couples Died due to Money Issue in Chennai

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

கடந்த 2020 மார்ச்சில் நம்மை எல்லாம் வீட்டில் உட்கார வைய்த்த கொடிய கொரோனா பல பேரின் வாழ்கையை திசை திருப்பி விட்டது வருத்தமளிக்கும் விசயமாக இருக்கிறது.அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்த கொரோனா அனைவருக்கும் பல வருத்தங்களை ஏற்படுத்தி கஷ்டங்களை கொடுத்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை மந்தைவெளி ஏ.எம். கார்டன் பகுதியில் உள்ள சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். மேலும் பால் விநியோகமும் செய்துள்ளார். அதேபோல் மாதாந்திர சீட்டும் நடத்தி உள்ளார்.

லோகநாதனின் மனைவி சாந்தி (49). இவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் குழந்தைகள் இல்லை. இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லாத காரணத்தினால், நாய் ஒன்றை தங்களது குழந்தையை போல சாம் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர்.

இவர் பல தொழில்கள் செய்து வந்தாலும், கொரோனா ஊரடங்கின், காரணமாக  அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே, இவர் அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்கள் என பலரிடமும் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் லோகநாதன் கடனையும், அதற்கு உண்டான வட்டியையும் திருப்பி கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். மேலும், மாதாந்திர சீட்டும் முடிவடைந்த நிலையில், அந்த பணத்தையும் திருப்பி கொடுப்பதில் லோகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை திருப்பி கொடுக்க அவரால் முடியவில்லை.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தினமும் லோகநாதன் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்துள்ளதால், அவர் மனவருத்தத்துடன் காணப்பட்டு உள்ளார். அவருக்கு கடன் சுமை அதிகமானதால், மனம் உடைந்து விரக்தியடைந்த லோகநாதனும், அவரது மனைவி சாந்தியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தாங்கள் இறந்தால், குழந்தையை போல வளர்த்த நாயின் நிலை என்ன ஆவது என கவலையடைந்த அவர்கள், நாயையும் கொன்று விட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள், நாயின் தலையில் பிளாஸ்டிக் பையை கொண்டு அது மூச்சு விட முடியாத அளவுக்கு முழுவதுமாக மூடி, நாயின் கழுத்தோடு இறுக்க கட்டி விட்டுள்ளனர்.

அதன் பின்னர் இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் நாயோ, பிளாஸ்டிக் பையை கொண்டு தலையை மூடி கட்டப்பட்டதால்,  அதனை கடித்து கிழித்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. பின்னர் நாய் இரவில் கத்திக்கொண்டே இருந்ததன் காரணமாக,  அக்கம்பக்கத்தினர்,  லோகன்நாதன் வீட்டு கதவை வந்து தட்டியுள்ளனர். ஆனால், வெகுநேரமாக தட்டியும் அவர்கள் வீட்டு கதவு திறக்காததால்,  சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் காரணமாக, விரைந்து வந்த அபிராமபுரம் போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கியதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர். அந்த விசாரணையில்,  தற்கொலை செய்து கொள்ளும் முன்பு லோகநாதன் அவர்கள் தனது நண்பர்களுக்கு செல்போனின் மூலம் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த குறுஞ்செய்தியில், தங்களது வீட்டை விற்று அதில் வரும் பணத்தை தங்களுக்கு கடன் கொடுத்த நல்லவர்களுக்கு திருப்பி கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். அதில் கடன் கொடுக்க வேண்டிய நபர்களின் பெயர்களையும் இணைத்து அனுப்பி உள்ளார்.

அவர் அதை தொடர்ந்து, தங்களது உடல்களை ஒரே குழியில் புதைத்து விடுங்கள் என்றும், அந்த செல்போன் தகவலின் மூலம் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.