இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

0
223

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது.

அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே கூறியிருக்கிறார்.

இந்திய விண்வெளித்துறையின் அடுத்த மைல்கல்லான சந்திராயன் 2 விண்கலம் இன்று சரியாக 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலம் புறப்பட்ட சில சில நிமிடங்களில் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இவ்வாறு சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்ததாகவும், அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க : 28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

இந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தை ஆராயவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிகரமான நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.

“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.

மேலும் படிக்க : தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது, என்று கவிதை வடிவில் வைரமுத்து கூறியுள்ளார்.

மேலும் படிக்க : மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleவேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.
Next articleஉணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!