சசிகலா அவ்வபோது அதிமுகவை தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருவதால் அதிமுகவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.அத்துடன் சசிகலாவுடன் உரையாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக நீக்கி வருகின்றது. இதனால் அதிமுகவினர் பலரும் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என்று பலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருகிறார்கள். இதன் காரணமாக, அதிமுக தலைமை மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இருந்தாலும் அதனை சமாளிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களுக்கு அந்த கட்சியின் தலைமைப் பேட்டி கொடுத்து வருகிறது.
அதிமுகவில் இருந்து பல தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என்று அனைவரும் கட்சியிலிருந்து விலகி சென்ற காரணத்தால், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்களும், இலக்கிய அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த அறிவிப்பு வருமாறு, கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதி கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் இன்று முதல் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆகவும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் ஆகும் கீழ் கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதன்படி கழக மகளிரணி நிர்வாகிகள் பட்டியலில் கழக மகளிரணி செயலாளராக பா வளர்மதி அவர்களும், இணைச் செயலாளராக மரகதம் குமாரவேல் அவர்களும், நியமிக்கப் படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கழக இலக்கிய அணி பட்டியலில் கழக இலக்கிய அணி செயலாளராக வைகைச்செல்வன் நியமிக்கப்படுகிறார். என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல கழக வர்த்தக அணி நிர்வாகிகள் பட்டியலில் கழக வர்த்தக அணி செயலாளராக வெங்கட்ராமன் சட்டசபை உறுப்பினர் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல இணைச் செயலாளராக ஆனந்தராஜா அவர்களும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கழகத்தின் உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்கள்.