வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!
தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தை பற்றிய அப்டேட் கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் போராடி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநு குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/galattadotcom/status/1422064607091302406?s=20
தற்போது இந்த படத்தில் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஓபனிங் பாடல் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.