வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Photo of author

By Vijay

வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யாவின் நிறைவடைந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தன்னுடைய சொகுசு பைக்கில் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் முதல் பாடல் வைரலான நிலையில், இரண்டாவது பாடலுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது டுவிட்டரில் #valimaisecondsingle என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.