சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடுமையான போட்டிக்கு நடுவில் மக்கள் நீதி மையம் கமல்ஹாசனை 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்தான் வானதி சீனிவாசன்.
இவர் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறார். இவருக்கு தமிழக மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்சியில் சேர்ந்த அவர்களுக்கு எல்லாம் பெரிய பெரிய பதவிகளை கொடுத்த பாஜக வானதி ஸ்ரீனிவாசனை வெயிட்டிங் லிஸ்டில் கிடைத்தது.
அவருடைய நீண்ட காத்திருப்புக்கு பின்னர் கிடைத்த வெற்றிதான் இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி. இனி கோவை தெற்கு தொகுதியை எக்காரணத்தை கொண்டும் மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களிலும் அந்தப்பகுதியில் பாஜகவை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
வானதி சீனிவாசனும் இந்த தொகுதியை எப்படியாவது இனிவரும் காலங்களிலும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறார். இத்தகைய நிலையில் தொகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்த வானதி சீனிவாசன் அதை நிவர்த்தி செய்யவும் முயற்சித்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய தொகுதி மக்களின் குறைகளை உடனடியாக தெரிந்துகொண்டு சரிசெய்ய தனது அலுவலக வாட்ஸப் எண்ணை மக்களுக்கு கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டிற்காக எந்த கோரிக்கைகளையும் நீங்கள் வாட்ஸப் மூலம் தெரிவிக்கலாம் என்று வானதி சீனிவாசன் 7200331442 என்ற எண்ணை மக்களுக்கு வழங்கியுள்ளார்.