ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!! 

Photo of author

By Amutha

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!! 

ஆடுகள் மீது வேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோதியதால் கோவமடைந்த உரிமையாளர் ரயிலின்  கற்களை வீசியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு தற்போது முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், இதில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. அதிக வேகம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்க முடியாத அளவு டிக்கட் விலை அதிகம், ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் போன்றன நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

தற்போது இதேபோல உத்திர பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் லக்னோ இடையே கடந்த 7- ஆம் தேதி பிரதமர் மோடியால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு தொடங்கப்பட்டு ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நன்னு பஸ்வான் என்பவரின் ஆடுகள் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் புற்களை  மேய்ந்து கொண்டுள்ளன. அப்போது அந்த வழித்தடத்தில் விரைவாக வந்த வந்தே பாரத் ரயில் மோதிச் சென்றதில் சில ஆடுகள் பலியாகின.

இதனால் ஆத்திரமடைந்த பஸ்வான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த வழியே சென்ற ரயில் மீது கற்களை வீசியுள்ளனர். நேற்று காலை 9 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் பகுதியளவு சேதம் அடைந்து உள்ளன. சோஹாவால் என்ற பகுதி வழியே ரெயில் கடந்து   சென்றபோது, இந்த சம்பவம் நடந்தது. இருந்தபோதிலும் ரயில்  லக்னோ நகரை  சென்றடைந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பஸ்வான் மற்றும் அவரது இருமகன்கள் அஜய், விஜய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.