நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

0
105
#image_title

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக வேகத்துடன் கூடிய குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதாவது தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் பயன் பெறும் வகையில் 11 புதிய வந்தே பாரத் இரயில்களின் சேவையை பிரதமர் மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்24) காணொளி காட்சி மூலமாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சென்னை முதல் நெல்லை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் முடி அவர்கள் இன்று(செப்டம்பர்24) தொடங்கி வைத்துள்ளார். அதன்படி நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் சென்னைக்கு மதியம் 1.50 மணிக்கு வந்து பிறகு சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்து சேரும்.

நெல்லையில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் இரயிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்த வந்தே பாரத் இரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய 6 இரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் இயங்கும் என்றும் அறிவுப்பு வெளியாகி இருக்கின்றது.

Previous articleதிருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!
Next articleபிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!!