பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது முப்பால் காலமடைந்தார்.
வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முண்ணனி பாடகியாக திகழ்ந்தவர். தீர்க்க சுமங்கலி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அவர் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார். அவர் குரலில் வெளிவந்த நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றது.
சமீபத்தில் அவருக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.