நான் நாப்பது கல்யாணம் கூட செய்வன்…உங்களுக்கு என்ன?!! வனிதா அதிரடி பேட்டி!!

Photo of author

By Jayachithra

நான் நாப்பது கல்யாணம் கூட செய்வன்…உங்களுக்கு என்ன?!! வனிதா அதிரடி பேட்டி!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் வனிதா. மேலும் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றார்.

நடிகை வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா அவர்கள் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், வனிதா பவர் ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி இருந்தது. மேலும் நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் பரவியது. இதனை அடுத்து தற்போது வனிதா இதனை குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

அதில் ஆண்களுக்கு நான்கு, ஐந்து திருமணம் நடந்தால் கூட அதனை யாரும் கேட்பது இல்லை. ஆனால் பெண்கள் செய்தால் மட்டும் பேசுகின்றனர். நான் நான்கு அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன். எதற்கும் அஞ்சமாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன் என்று கூறினார்.

மேலும், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டதுபோல் வெளியிட்ட புகைப்படம் திரைப்படத்துக்காக வெளியிடப்பட்டது மட்டுமே. அதனைத் தொடர்ந்து விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.