விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

Photo of author

By Anand

விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!

Anand

vaniyambadi-andra-elephant-death

ஆந்திரா மாநிலம் பங்காருபாளையம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பங்காருபாளையம் அடுத்த குண்டபெல்லா வனப்பகுதிக்கு அருகே உள்ள மொகலிவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் ஒரு ஆண் யானை புகுந்து அங்குள்ள மாமரங்களை கிளைகளை உடைத்து சேதம் செய்துள்ளது.

அதன் பின்னர் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்மாற்றியை கீழே தள்ளிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.அந்த வழியாக சென்ற கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானை உயிரிழப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆண்டு மட்டும் மின்சார விபத்தில் 4 யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.