வன்னியர்/ரெட்டியார்: அன்புமணி உஷார்.. பாஜக பிளானே இதுதான்!! அலர்ட் செய்யும் முன்னாள் பாஜக நிர்வாகி!!
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை முக்கிய காரணம் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தெரிவித்து வந்தனர்.குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜனும் அண்ணாமலைக்கு எதிரான தனது தரப்பு கருத்துக்களை வைத்தார்.இதனால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.இதனிடையே அண்ணாமலையை தமிழிசை சாடியதன் நோக்கமாக, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா அவர்களை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என பாஜக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.இதனை தொடர்ந்து திருச்சி சூர்யா, தம் டிவிட்டர் பக்கத்தில் பாஜகவை முழுமையாக எதிர்த்து பல பதிவுகளை போட்டு வருகிறார்.அதில் பாஜக, முக்குலத்தோர் சமூகத்தை முழுமையாக எதிர்ப்பதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
https://x.com/TiruchiSuriyaa/status/1805849264171761820
இந்நிலையில் இன்று அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது வரை பாஜகவில் நிர்வாகிகள் ஜாதியின் அடிப்படையில் உட்கார வைத்துள்ளதாகவும் குறிப்பாக வன்னியர் மற்றும் ரெட்டியார் இருவருக்கும் ஒன்றுக்கு ஒன்று சமமான முறையிலும், செட்டியார் மற்றும் முக்குலத்தோர் இவர்களுக்கு இரண்டுக்கு இரண்டு என்று முறையிலும், கவுண்டர் நாடார் எஸ்சி எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ஐந்திலிருந்து நான்கு வரையிலான பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார்.
பாஜக தங்களின் சுயநலத்திற்காக யாரை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கும் என்றும்,இதனை நாம் மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு நடந்ததை வைத்து அறிந்து கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.மேலும் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களை டாக் செய்து இட ஒதுக்கீட்டை வைத்துக் கூட பாஜக கட்சிக்குள்ளேயே வேறுபாட்டை ஏற்படுத்தும்.இவ்வாறான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்து கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.மேற்கொண்டு அதில் அவர் கூறியுள்ளதாவது,