வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்
தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு
இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.ஆனால் தற்போது வரை அது சாத்தியம் அடையவில்லை.
பாமக இணைய கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் கலைஞர் எங்களுக்கு அழுகிய மாம்பழம் கொடுத்தார் நீங்களாவது நல்ல சுவையான சேலத்து மாங்கனியை தாருங்கள் என்று இட ஒதுக்கீடு பற்றி பேசினார்.மேலும் அவர் இட ஒதுக்கீடு தரவில்லை எனில் 2021 ல் நானே தலைமை ஏற்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் பாமக டிசம்பர் 1 ம் தேதி முதல் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வரும் நேரத்தில் அதிமுக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் முக்கிய நபரான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டாம் என்று பேசினார் என்று அதிமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.மேலும் அவர் வன்னியர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு தந்தால் மற்ற சமுதாயங்களில் ஓட்டு பாதிக்கும். இதனால் அதிமுக தோல்வியை கூட சந்திக்கலாம் என பேசியுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.
இதனால் ஓ.பி.எஸ் மீது கடும் கோபத்தில் உள்ள பாமகவினர் இணையத்தில் கடுமையாக விமர்சனங்களை வைக்கிறார்கள்.
அதாவது வன்னியர்களின் உரிமையை 32 ஆண்டுகளாக அபகரித்தது போதாதா? அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் இருந்துகொண்டு வன்னியர் இடஒதுக்கீட்டை தடுப்பது நியாயமா? வன்னியர் சொத்தை அபகரிப்பது இவருக்கு வெட்கமாகவே இல்லையா?
என்றும் அதிகார இடத்தில் அமர்ந்து கொண்டு வன்னியர் இடஒதுக்கீட்டை மறுக்கும் அநீதியை மக்கள் எழுச்சியால் முறியடிப்போம். வன்னியர் இடஒதுக்கீட்டை மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் அடைந்தே தீருவோம்! என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால் இணையத்தில் பாமக – அதிமுக யினர் இடையே வாக்குவாதம் நடைப்பெற்ற வருகிறது.இது கூட்டணி விரிசலுக்கான ஆரம்பம் விரைவில் கூட்டணி முறிவு ஏற்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவின் கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள பாமகவுக்கு வட தமிழகத்தில் கனிசமான ஓட்டு வங்கி உள்ளதால் இட ஒதுக்கீடு தராத பச்சத்தில் பாமக தேர்தலை தனியாகவோ அல்லது மற்ற கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் அது அதிமுகவின் முதல்வர் கனவை அடியோடு அழிந்து விடும் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
தற்போது உள்ள அரசியல் சுழலில் கூட்டணி கட்சிகளின் ஓட்டு வங்கியை பொறுத்தே திராவிட கட்சிகளின் வெற்றி தோல்வி அமையும் என்பதால் அதிமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.