ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! 

0
260
varalakshmi-already-has-a-daughter-as-second-wife-the-background-of-the-sudden-engagement
varalakshmi-already-has-a-daughter-as-second-wife-the-background-of-the-sudden-engagement

ஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! 

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் வருங்கால கணவர் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்புவின் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இந்த படத்தினை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வரலட்சுமி பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

மேலும் வில்லியாக சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து குறிப்பிடத்தக்க கவனம் பெற்றார். மேலும் தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அடுத்ததாக இவர் நடித்த கன்னித்தீவு, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், போன்ற தமிழ் படங்கள் இவருக்கு சரியாக அமையவில்லை.

அதேபோல தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, ஏஜென்ட் கோட்டா பொம்மாளி, மைக்கேல் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. மேலும் அடுத்த வருடங்கள் இவரது கைவசம் 8-க்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி மும்பையில் வரலட்சுமிக்கும், நிக்கோலை சச்சுதேவ் என்ற தொழிலதிபருக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலை ஒரு கேலரிஸ்ட். இவர் கேலரி 7 என்ற கண்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக பழகி வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன்  மிகவும் எளிமையான முறையில் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அத்துடன் இந்த ஆண்டே திருமணமும் நடைபெற உள்ளது.

இதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள போகும் அவரது வருங்கால கணவர் குறித்த விபரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படி நிக்கோலைக்கு கவிதா என்ற மாடலிங் பெண்ணுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்து 15 வயதில் காஷா என்ற மகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர் சிறார்களுக்கான வலு தூக்கும் போட்டியில் பங்கு பெற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். கடக சில ஆண்டுகளுக்கு முன்னால் கவிதாவை பிரிந்த நிக்கோலை வரலட்சுமி உடன் பழகி வந்துள்ளார். அதன் பின்னர் இந்த மாதம் அவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே நடிகர் விஷாலை காதலித்து வந்ததோடு மட்டுமில்லாமல் நடிகர் சங்க தேர்தலில் தனது தந்தைக்கு எதிராக விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்ததோடு மட்டுமில்லாமல் விஷாலுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்து அந்த திருமணமும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது வரலட்சுமிக்கு திடீரென வேறொரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Previous articleஇனி அவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினாலும் நடவடிக்கை பாயும்!!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?