ஞானவாபி மஸ்ஜித் விவாகரத்தில் அனைத்து உரிமை மனுக்களையும் இணைத்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்!!

Photo of author

By Savitha

ஞானவாபி மசூதி விவாகாரத்தில் உரிமையியல் மனுக்கள் அனைத்தையும் வாரணாசி மாவட்ட நீதிமன்ற ஒன்றாக இணைத்தது.

வாராணசி ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன், விநாயகர், ஹனுமன் ஆகியவற்றுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரியும், டெல்லியை ராக்கி சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உரிமையியல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதை எதிர்த்து மசூதி கமிட்டி வாராணசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த மனுக்கள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஏற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்தால் அதன் மீது மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.