முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்!

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்!

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1348வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் ஆரவாரம் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மாலை அணிவித்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வர அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் – சுமார் 20க்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்று திரண்டு இருச்சகர வாகனங்களில் பேரணியாக வந்தும் கொடியை வைத்து சுத்தி அட்ராசிட்டியில் ஈடுபட்டனர் இதனால் காவல் துறையினருக்கும் . இளைஞ்ர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது – பொது மக்கள் 1கி.மீ அளவிற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

முத்தரையர் சிலை அமைந்துள்ள சாலையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மருத்துமனைக்கு செல்லும் வழிகள் பேரிகாட் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.