வெரிகோஸ் வெயின்: நரம்பு சுருட்டல் நோய்க்கு நொடியில் தீர்வு!! உடனே ட்ரை பண்ணுங்கள்!
உங்களில் பலர் நரம்பு சுருட்டல் பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.ஓர் இடத்தில் நீண்ட நேரம் அமருவது,நிற்பது என்று இருப்பவர்களுக்கு நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்படும்.இவை உயிருக்கு ஆபத்தானவை இல்லையென்றாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
நரம்பு சுருட்டல் நோய்க்கான அறிகுறிகள்:-
*கால் வலி
*கால் அரிப்பு
*கால்களில் நரம்பின் நிறம் மாறுதல்
*கால்களில் சுருள் சுருளாக நரம்பு தெரிவது
தேவையான பொருட்கள்:-
1)மாதுளை சாறு – 50 மில்லி
2)அருகம்புல் சாறு – 30 மில்லி
3)வெட்டி வேர் பொடி – 1 தேக்கரண்டி
4)ஜாதிக்காய் பொடி – 1 தேக்கரண்டி
5)தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு மாதுளம் பழத்தின் தோலை நீக்கி அதன் விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 5 தேக்கரண்டி மாதுளை விதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு 1/4 கைப்பிடி அளவு அருகம்புல்லை நீரில் அலசி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த அருகம்புல் சாற்றை மாதுளை சாற்றுடன் கலந்து விடவும்.
அதன் பிறகு சிறிதளவு வெட்டி வேரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.அதேபோல் ஒரு ஜாதிக்காயை அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வெட்டிவேர் மற்றும் ஜாதிக்காய் பொடி 20 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.
இந்த இரண்டு பொடிகளையும் மாதுளை சாற்றில் கலக்கவும்.அதன் பின்னர் சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பிற்கு சில மணி நேரங்களில் தீர்வு கிடைத்து விடும்.