Vericose Veins: படுத்தி எடுக்கும் நரம்பு சுருட்டல் பிரச்சனைக்கு கை வைத்தியங்கள் மூலம் விடிவுகாலம் பிறந்தாச்சு!!

Photo of author

By Divya

Vericose Veins: படுத்தி எடுக்கும் நரம்பு சுருட்டல் பிரச்சனைக்கு கை வைத்தியங்கள் மூலம் விடிவுகாலம் பிறந்தாச்சு!!

மனித உடலில் நரம்பு மண்டலம் முக்கிய பணியை செய்கிறது.குறிப்பாக கால் பகுதிகளில் இருக்க கூடிய நரம்புகள் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது.

இந்த நரம்புகளில் வால்வுகள் உள்ளது.இவை இரத்த ஓட்டத்தை ஒரு வழிப் பாதையில் மாற்றும் பணியை செய்கிறது.ஒருவேளை இந்த வால்வுகள் பலவீனமானால் நரம்புகள் புடைத்து அப்பகுதியில் கருப்பு அல்லது பச்சை நிறத்தில் இரத்தம் தேங்கிவிடும்.

இதனால் அதிகப்படியான வலி,வீக்கம் உண்டாகி நடப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த நரம்பு சுருட்டல் பிரச்சனையை அறுவை சிகிச்சை இன்றி வீட்டில் உள்ள பொருட்கள் பயன்படுத்தி எளிய முறையில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தீர்வு 01:

1)மஞ்சள்
2)வசம்பு
3)கருந்துளசி
4)கற்றாழை ஜெல்

உரலில் ஒரு துண்டு வசம்பை போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து அதில் இடித்த வசம்பு,1/4 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள்,1/4 கைப்பிடி அளவு கருந்துளசி மற்றும் 3 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை நரம்பு சுருண்ட இடத்தில் தடவி விட்டால் சில தினங்களில் நரம்பு சுருட்டல் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைத்து விடும்.

தீர்வு 02:

1)கருப்பு எள்
2)காய்ச்சாத பசும் பால்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்க்கவும்.அதன் பிறகு 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்ஊற வைக்கப்பட்ட எள் மற்றும் பாலை ஊற்றி விழுது பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.இந்த விழுதை நரம்பு சுருண்ட இடத்தில் பூசி வர விரைவில் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 03:

1)திராட்சை விதை
2)தண்ணீர்

50 கிராம் அளவு கருப்பு திராட்சை விதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் நரம்பு சுருட்டல் பிரச்சனை சரியாகும்.

தீர்வு 04:

1)பெரு நெல்லிக்காய்
2)இஞ்சி

ஒரு பெரு நெல்லிக்காயின் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு வடிகட்டி குடித்து வந்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பு நீங்கும்.