அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

Photo of author

By Savitha

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

Savitha

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மண்டபத்தில் இருந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி புகைப்படம் அகற்றப்பட்டதற்கு கட்சியினர் எதிர்ப்பு.

மண்டப வாயிலில் அம்பேத்கர் புத்தகங்களை விற்பதற்கான அரஙகு அமைப்பதில் அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் புத்தக அரங்கம் வைக்க அனுமதியளிக்கப்பட்டது.

பின்னர் மணி மண்டப வளாகத்தில் பூவை.ஜெகன்மூர்த்தி உருவபடம் அகற்றப்பட்டது குறித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் மணி மண்டபம் அமைக்க முக்கிய பங்களிப்பு செய்த பூவை.ஜெகன்மூர்த்தி உருவப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.