தனுஷுக்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

0
36
Varis film actress paired with Dhanush!! Eagerly waiting fans!!
Varis film actress paired with Dhanush!! Eagerly waiting fans!!

தனுஷுக்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார்.

இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

மேலும் இவர்  நம்பர் 1 ஹீரோயினாக தெலுங்கு திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகிறது. இதன் காரணமாக இவரின் சம்பளம் உயர்ந்து வருகிறது. மேலும் இவருக்கு அதிக அளவில்  ரசிகர் கூட்டமும்  உள்ளது.

தற்போது இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தனுஷ் நடிக்க உள்ளார். மேலும் படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளளர் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள்.

author avatar
Jeevitha