வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட்

Photo of author

By Parthipan K

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் குறித்த அப்டேட்

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் வரும் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தி நடித்துள்ளனர்.

இந்தநிலையில், இந்தபடத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த 5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய், எம்.எம். மானசி பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் யூட்யூப்ப்பில் 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனிடையே, படத்தின் 2 வது பாடலான தீ தளபதி பாடல் வரும் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.