CRICKET: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார்.
இந்தியா தென்னாபிரிக்க இடையிலான மூன்றாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்தன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் இருவரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தனர்,
இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கி 219 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.
பவுலிங் இல் இந்திய அணி அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். வருண் 2 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் இந்த தொடரில் 10 விக்கெட்டுகள். ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் அஸ்வின் மற்றும் பிஷ்னோய் இருவரும் 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இந்நிலையில் இன்னும் ஒரு போட்டி உள்ளது.