கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நாகர்கோயிலில் எச்.வசந்தகுமாரின் எம்பி அலுவலகம் டி.டி.கே காம்ப்ளக்ஸில் இருந்து வந்தது. இன்று காலை அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது அந்தக் கட்டடத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் அது மொத்தமாக மூடப்படுகிறது என்று தெரியவருகிறது. அவரது அலுவலகத்தை சீல் வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.