சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!!

0
214

சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!!

சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

ஹைதராபாத் சங்கரெட்டி மாவட்டம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் வேகமாக ஆரஞ்ச் டிராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து ஒன்று 26 பயணிகளை மும்பையில் இருந்து ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.

வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியானது. அதிகாலை என்பதால் புகை வெளியாவதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து புகை அதிகமாகி தீ பற்றி எரிய ஆரம்பித்தது. முன்பு கவனிக்கத் தவறிய ஓட்டுனர், பேருந்தின் பின்புறம் தீப்பிடித்து எரிவதை கவனித்து உடனடியாக பேருந்தை ஓரம்கட்டினார்.

சாலையில் ஓரமாக நிறுத்தியதுடன் வேகமாக பயணிகளை இறங்கவும் கூறியதால், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கி பாதுகாப்பாக நின்றனர். மேலும் தீப்பிடித்த பேருந்த கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து கோரமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக இராமச்சந்திரபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleவசந்தகுமார் எம்பி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் – அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
Next articleஅப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here