இப்போதெல்லாம் நிறைய பேர் தங்கள் வீட்டில் ஒரு கார் வைத்திருக்கிறார்கள். பயணத்தை வசதியாக மாற்ற கார் வாங்குகிறார்கள். அப்படி ஆசையாக வாங்கிய காரில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், பயணத்தின் போது சிரமங்களைத் தவிர்க்கலாம்.
மகிழ்ச்சியான, வசதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. எனவே சில பொருட்களை காரில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் நம் அன்றாட வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் பல குறிப்புகள் உள்ளன.
எத்தனையோ பேர் வாஸ்து சாஸ்திரத்தை நம்பி அதற்கேற்ப நடந்து கொள்கிறார்கள். வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டிலும் வாழ்க்கையிலும் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. எதிர்மறை ஆற்றலை நீக்கும். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
பாதுகாப்பான பயணங்களுக்காக வாகனங்களில் வைப்பதற்கான வாஸ்து பொருட்கள்: சாமி சிலைகள், குலதெய்வ படங்கள், நல்ல வாசனை திரவியங்கள், மற்றும் மங்களகரமான சின்னங்கள் போன்றவை பயணத்தை இனிமையாக்கும்.
1. விநாயகர் சிலை:
தடைகளை தகர்ப்பவர் விநாயகர் என நம்பப்படுவதால் காரில் விநாயகர் சிலையை வைப்பது மிகவும் நல்லது. மேலும் விநாயகர் சிலை நேர்மறை ஆற்றலை அதிகரித்து, எதிர்மறை ஆற்றலையும், பயணத்தின்போது ஏற்படும் தடைகளையும் நீக்க வல்லது என்பதால் காரில் வைக்க வேண்டிய முக்கியமான பொருளாக விநாயகர் சிலை உள்ளது.
2. அனுமன் சிலை:
அனுமன் சிலை மங்களகரமானதாக கருதப்படுவதோடு, கெட்ட விளைவுகள் இருந்தால் அதை அகற்றி விடும் தன்மையும் கொண்டது. மேலும் அனுமன் சிலை நேர்மறை ஆற்றலை அதிகரித்து, நம்மை காப்பதாக நம்பப் படுவதால் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆஞ்சநேயரின் சிலையை காரில் தொங்கவிடலாம்.
3. கருப்பு நிற ஆமை:
நாம் செய்ய விரும்பும் வேலை நன்றாக அமைவதற்கு கருப்பு ஆமை சிலையை காரில் வைப்பது சிறந்தது. இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்கிறது .
4. இயற்கை படிகங்கள்:
இயற்கை படிகங்கள் மங்களகரமாக கருதப்படுவதோடு, நம்மை பாதுகாப்பாகவும் வைத்திருந்திருக்கும். இயற்கையான படிகங்களை காரில் வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரித்து மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் பயணம் செய்யலாம்.
5. சுத்தமான நீர்:
சுத்தமான நீர் மனதை பலப்படுத்துவதோடு சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. ஆகவே காரில் எப்போதும் சுத்தமான தண்ணீரை வைத்திருங்கள்.
6. கல் உப்பு:
கல் உப்புடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து, காகிதத்தில் மடித்து காரின் இருக்கைக்கு அடியில் வைக்கவேண்டும். இது எதிர்மறை அம்சங்களை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரித்து பயணத்தை பாதுகாப்பாக்குகிறது. கல் உப்பு, பேக்கிங் சோடா கலவையை அடிக்கடி மாற்றுவது நல்லது.
இது போன்ற வாஸ்து பொருட்களை உங்களுடைய வாகனங்களில் வைக்கும் பொழுது பயணங்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் அமையும். மேலும் உங்களுடைய வாகனங்களின் மீது உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் கண் திருஷ்டிகளை நீக்கிவிடும்.