மீண்டும் ஹீரோவாகும் வாத்தியார் பசுபதி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Photo of author

By Rupa

மீண்டும் ஹீரோவாகும் வாத்தியார் பசுபதி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

பசுபதி ஆரம்ப கட்ட காலத்திலிருந்து தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று பல படங்களில் தனது உணர்ச்சி பூர நடிப்பை கொடுத்து வருகிறார்.முதலில் இவர் மேடை நடிகராக தான் அறிமுகமானார்.இவரது அபராமான நடிப்பால் தற்பொழுது வரை பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம்,மலையாளாம்,தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் தூள் திரைப்படத்தில் விக்ரமிற்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.அதனையடுத்து இயற்கை,விருமாண்டி படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக நடித்திருக்கிறார்.

இதனையெல்லாம் விடவும் இவரது வெடிகுண்டு முருகேசன் மற்றும் வெயில் படங்கள் ஆகியவை இன்றளவும் மக்களால் பேசப்பட்டு வருகிறது.நட்புக்கு ஆதாரமாக ரஜினியுடன் நடித்த குசேலன் திரைப்படம் அனைவரையும் அதிகளவு கவர்ந்து என்றே கூறலாம்.அதனையடுத்து அரவான் என்ற திரைப்படம் இவரது நடிப்பை ஓர் படி மேலோங்கி காட்டியது.இவரது சிறு சிறு அசைவுகளும் கதாபாத்திரத்துடன் ஒன்றாகி காணப்படும்.அதனையடுத்து தற்போது அசுரன் படத்தில் துணை கதாபத்திரத்தில் நடித்தார்.

துனுஷ்க்கு இணையான நடிப்பையே வெளிபடுத்தினார்.இத்தனை படத்தில் கொடுக்காத பெயர் இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் அதிக புகழ் வாங்கி கொடுத்தது.இதில் அவர் ரங்கூன் வாத்தியார் என்று அழைக்கப்பட்டு தற்போது இவரது ரசிகர்கள் அனைவரும் வாத்தியார்,என்றே கூறி வருகின்றனர்.இவர் தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

அந்த படப்பிடிப்பிற்கான பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலகி வருகிறது.இந்த படத்தை ராம் என்பவர் இயக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் அம்மு அபிராமி,ரோஹனி போன்றோர் நடிக்க உள்ளனர்.இவர் பல ஆண்டுகள் கழித்து ஹீரோவாக நடிக்க உள்ளதால் இவரது ரசிகர்கள் இணையத்தில் ஹீரோ வாத்தியாரே வா என்று ஹாஷ்டாக் போட்டு ஷேர் செய்து வருகின்றனர்.