கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

Photo of author

By Jayachandiran

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் எந்த அசம்பாவித மும் இல்லாமல் நடைபெற்று, கோவை போன்ற இடங்களில் விடிய விடிய போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்து, அதற்கான சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரங்களை செய்து வருகிறது. இந்நிலையில், இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள் அசிங்கமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு திருமாவளவன் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், அவரது கட்சி தொண்டர்கள் தனது சுயநல அரசியல் தேவைக்காக இந்து கோயில் சுவர்களில் கட்சி விளம்பரங்களை வண்ணம் தீட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர்.

தேசம் காப்போம் மாநாட்டிற்காக வீட்டு சுவர்கள், பல்வேறு கட்டிடங்களில் விளம்பரம் செய்கிறார்கள். இந்து கோயில் சுவர்களில் எந்த அனுமதியும் கேட்காமல் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கேள்வி கேட்டால் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்படுவோம் என்பதால் யாரும் கேட்பதில்லை என்றும், இவர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்து கோயில்களில் சுவர் விளம்பரம் செய்யும் விசிகவினர் கிறித்தவ தேவாலங்களிலோ, மசூதிகளிலோ விளம்பரம் செய்ய முடியுமா என்கிற கேள்வியை பலர் முன்வைக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என்று திருமாவளவன் சர்ச்சையாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.