திருமணத்திற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாயை திட்டமிட்டு சுருட்டிய விசிக நிர்வாகி! குற்றவாளியை காப்பாற்றிய காவலர்கள்?

0
141

அயாத்திதாசர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் நேரடி வாரிசான ரேவதி நாகராஜன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

எனது இரு மகள்களுக்கும் திருமணம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. எனது தந்தை இறுதி காலத்தில் திருவள்ளூரில் வாழ்ந்து மறைந்ததால் அங்கு பழக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடக பிரிவில் இருக்கும் கல்யாண சுந்தரம் என்பவர்,

அக்கா வங்கியில் உங்கள் மகள்களின் திருமணத்திற்காக வைத்திருக்கும் பணத்தை எனது வங்கிக்கு மாற்றி தாருங்கள், நான் எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு பயன்படுத்திக் கொண்டு வட்டி பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு ரேவதி மறுத்துள்ளார். பின்னர் வீடு ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கி விற்று மூன்று மாதத்தில் 25 லட்சம் திருப்பித் தருகிறோம் என்றும் இன்னும் பல பொய்களை கூறி 19 லட்சத்தை வங்கியின் மூலமாக விசிக ஊடக பிரிவு நிர்வாகி கல்யாண சுந்தரம் பணத்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து பணத்தை ரேவதி திரும்ப கேட்ட பொழுது இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என்று கல்யாண சுந்தரம் ஏமாற்றி வந்துள்ளார். தனது இரண்டு மகள்களுக்கும் உறவினர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி மிக எளிமையாக திருமணம் நடத்தியுள்ளனர். திருமணத்திற்காக அடகுவைத்த நகைகளும் மூழ்கிபோயுள்ளன. இந்த பிரச்சினை சம்பந்தமாக 2 வருடத்திற்கு முன்பே திருமாவளவனை சந்தித்து பேசியும் பணமீட்பு பற்றிய எந்த முன்னேற்றமும் இல்லை.

விசிக கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள வன்னியரசு, செல்லதுரை, தகடூர் முனுசாமி, தமிழ்பாண்டியன் போன்றோரிடம் கூறியும் எந்த பயனும் இல்லை. கடந்த 15.03.2019 அன்று விசிக கல்யாண சுந்தரத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரு எஸ்ஐ சாரதி விசாரித்து மூன்று மாதத்தில் பணத்தை வாங்கி தருவதாக கூறியுள்ளார். மூன்று மாதத்திற்கு பின் மீண்டும் காவல் ஆய்வாளர் ருக்மனந்தன் மூன்று மாதம் எழுதி கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளர் ருக்மனந்தன், எஸ்ஐ சாரதி போன்றோர் கல்யாண சுந்தரத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பூண்டி இளவரசு மற்றும் எஸ்கே குமார் ஆகிய விசிகவினர் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டலும் விடுத்ததாக புகாரில் கூறப்படுகிறது. கடன் ஒரு பக்கம் வட்டி ஒரு பக்கம் எந்த பணியும் செய்ய முடியாத ரேவதி மன உளைச்சலுக்கு ஆக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை பற்றி திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் அவர்களிடம் கூறிய பின்னர், FIR போடப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட நகலை புகார்தாரரிடம் வழங்கிவிட்டு இதற்கு முன்பே கல்யாண சுந்தரம் பிணையில் சென்றதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவிப்பதாகவும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது ஏனோ? என்ற கேள்வியையும் ரேவதி எழுப்பியுள்ளார். கடைசியாக ஊடகத்தின் முன் பேசி தனக்கு ஆதரவு வேண்டும் என்று ரேவதி கூறியுள்ளார்.

இச்சம்வத்தின் மூலம் விசிக நிர்வாகியின் திட்டமிட்ட பண அபகரிப்பு சம்பவம் அம்பலமாகியதோடு, தேவைப்பட்டால் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதும் ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதும் வெளியாகியுள்ளது. இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous articleதமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு?
Next articleரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு – உயர்கல்வித் துறை விளக்கம்.