முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம்

0
253
Vanniyarasu
Vanniyarasu

முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம்

பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விசிக வன்னியரசு முத்துராமலிங்க தேவரை கொலைகாரன் என்று பழியை சுமத்தியுள்ளார். இதற்கு பெரும்பான்மையான மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் பேசியதாவது, நாங்கள் விசிக கட்சியினர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அறிவிக்கிறோம் அவருக்கு போஸ்டர் ஓட்டுகிறோம் அதேபோல் மற்ற தலைவர்களுக்கும் நாங்கள் இதை செய்கிறோம். ஆனால் தமிழ் தேசியவாதி என்று போற்றப்படும் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் இம்மானுவேல் சேகருக்கும் மாலை அணிவிக்கிறார், வீர வணக்கம் செலுத்துகிறார் மற்றும் இமானுவேல் சேகரை கொலை செய்த முத்துராமலிங்க தேவருக்கும் மாலை அணிவிக்கிறார் வீரவணக்கம் செலுத்துகிறார்.

அதாவது சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடிய இமானுவேல் சேகரையும் போற்றுகிறார். சாதியை தூக்கிப் பிடித்த முத்துராமலிங்கத் தேவரையும் போற்றுகிறார். இவ்வாறாக முரண்பாடாக நாம் தமிழர் கட்சி சீமான் செயல்படுவதாக குற்றம் சாட்டினார் விசிக வன்னியரசு.

மேலும் சாதியவாதியையும், சாதி ஒழிப்பு போராளிகளையும் இவ்வாறு சீமான் சமதளத்தில் எப்படி பார்க்கிறார் என்றும், முத்துராமலிங்க தேவர் இறந்து விட்டார் என்பதற்காக அவரை தூக்கிப்பிடித்து பேசக்கூடாது. சாதிய வன்மத்தோடு அவர் பேசிய ஆடியோ ஆதாரங்கள் இன்னும் இருக்கின்றது. தாழ்த்தப்பட்டோருக்கு முத்துராமலிங்க தேவர் செய்ததாக கூறப்படுவது அனைத்தும் கட்டுக்கதை எனவும், இமானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவர் எப்படி குற்றவாளியாக வந்தார் என்பதை பத்திரிக்கையாளர் தினகரன் தெள்ளத்தெளிவாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். சீமான் அவர்களே அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு பிறகு என்னிடம் வந்து விவாதம் செய்யுங்கள் நான் தயார் என்று பேசியுள்ளார்.

வன்னியரசின் இந்த குற்றச்சாட்டுக்கு அனைத்து சமுதாய மக்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் விசிக கட்சியின் இந்த மூர்க்கத்தனமான பேச்சானது விசிகவின் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு மேலும் பின்னடைவை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் விபூதியை நெற்றியில் வைக்காமல் கீழே கொட்டி இருந்தார். அப்பொழுது தேவர் சமுதாய மக்கள் இவரின் இந்த மோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

தற்பொழுது திமுகவின் கூட்டணியிலுள்ள விசிக கட்சியானது முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசி வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், தேவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் ஓட்டு திமுகவுக்கு விழுமா என தமிழக அரசியலில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleதிமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு
Next articleஅடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!