சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Photo of author

By Parthipan K

 சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Parthipan K

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.

அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த சாயப்பட்டறையில் பூஜ்ஜியம் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் அதனை இயக்காமலும்  தொழிற்சாலையில் ஏற்பட்ட கழிவுகளை அப்படியே சாக்கடை கால்வாயில் விட்டு விடுகின்றனர். இதனால் அங்கு வாழும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இச்சாக்கடை கழிவுகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது.இதனை தொடர்ந்து அந்த சாயப்பட்டறையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலகத்திற்கு பரிந்துரைசெய்யப்பட்டது.மேலும் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் அந்த சாயப்பட்டறை மூடப்பட்டதுள்ளது.இதனால்  மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.ஆறு லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமை பெற்ற சாயப்பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் சாக்கடையில் வெளியேற்றினால் இந்த தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இதையும் மீறி சாக்கடை கழிவு நீரை  சுத்திகரிக்காமல் வெளியேற்றினால்  தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு தக்க தண்டனையும் அளிக்கப்படும் எனக் கூறினார்.