ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!

0
59
Change in train timings! The statement released by Salem Railway Division officials!
Change in train timings! The statement released by Salem Railway Division officials!

 

ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!

ஜூன் 4-ம் தேதி சேலத்தில்  ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.அதனால் இரயில்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் {13352} இந்த ரயில் வழக்கமாக இயங்கும் நேரத்தில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் எர்ணா குளமிளிருந்து  பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்{ 12678} ரயில் வழக்கமாக செல்லும் நேரத்தை விட 3 மணி நேரம் தாமதமாக புறப்படும். கோவையில் இருந்து சென்னை செல்லும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் புறப்படும் நேரத்தில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.

மேலும் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போதும் இயங்கும் நேரத்தில் இருந்து 2 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். சேலம் ஜங்ஷனிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில் எப்போதும் கிளம்பும் நேரத்திலிருந்து 4மணி நேரம் தாமதமாக செல்லும். ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் இயங்கும் மாலை நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக கிளம்பும்.

இதுபோல 9 ரயில் நிலையங்கள் உள்ளது. ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று பிறகு கிளம்பும்.ராஜ் கோட் இல் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் 1.30 நிமிடமும், கொச்சுவேலி இருந்து கோர்பா எக்ஸ்பிரஸ் 40 நிமிடமும், பெங்களூரில் இருந்து கோவை செல்லும் உதயத் எக்ஸ்பிரஸ் 45 நிமிடமும், சென்னை சென்ட்ரல்விலிருந்து மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 20 நிமிடமும், டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடமும் திருவனந்தபுரத்திலிருந்து செகண்ட் ஹாத்தராபாத் சபரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடமும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடமும், திருப்பதியில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் 20 நிமிடமும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடமும், ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K