வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

0
102
Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!
Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு:

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Previous articleதிமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!
Next article“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!