அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர் சேலம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளு மிக்க தலைவராக விளங்கியதால் அவருக்கு சேலத்து சிங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் அப்போது ஒட்டுமொத்த சேலம் மாவட்டமும் கண்ணீரில் மூழ்கியது. அதோடு சேலம் மாவட்ட திமுகவும் சற்றே துவண்டு போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவருக்குப் பின்னால் அவருடைய மகனான வீரபாண்டி ராஜா தன் தந்தை விட்டுச் சென்ற கடமையை கட்சிக்காக செய்வதற்காக முன் நின்று செயல்பட்டு வந்தார் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பின்னர் சேலம் மாவட்டத்திற்கு திமுகவின் முகமாக திகழ்ந்தவர் வீரபாண்டி ராஜா தான்.

இந்த சூழ்நிலையில், திமுகவின் தேர்தல் பணி குழு செயலாளராக பணியாற்றி வந்தவரும் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக, இன்று காலை மரணம் அடைந்தார். அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வீரபாண்டி ராஜாவின் 58வது பிறந்தநாள் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்தில் உள்ள தன்னுடைய தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றுவிட்டு மாலை அணிவித்து விட்டு காரில் ஏற புறப்பட்டவர் திடீரென்று மயக்கமுற்று கீழே சாய்ந்தார்.உடனடியாக அவருடைய நண்பர்கள் அவரை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வீரபாண்டி ராஜா மறைவு என்பது தனிமனித மறைவு கிடையாது என தன்னுடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலத்து சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமை சகோதரர் வீரபாண்டி ராஜா, அவர்கள் இனிமையாய் பழகியும், அருமையான குணத்தாலும், அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் வீரபாண்டி ராஜா எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்க கூடிய வரை என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ,மாவட்ட செயலாளர், தேர்தல் பணிக்குழு செயலாளர், என்று பல கழகப் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டதுடன் சட்டமன்ற உறுப்பினராகவும், திறம்படப் பொதுமக்களுக்காக பணிபுரிந்தவர் சகோதரர் ராஜா அவர்கள் 2 தினங்களுக்கு முன்னால் சேலத்திற்கு அரசு விழாவிற்காக சென்றிருந்த சமயத்தில் கூட வீரபாண்டி ராஜா அவரை சந்தித்தேன் அன்புடன் பேசிக்கொண்டு இருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அத்தோடு மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம் மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய் விட்டு கதறும் அளவிற்கு நம்மை விட்டுப் பிரிந்தார். அண்ணன் வீரபாண்டியார் இதோ இப்போது வீரபாண்டி ராஜா வீரபாண்டியார் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது என்னை நானே எப்படி தேற்றிக் கொள்வது வீரபாண்டி ராஜா போன்ற ஒருவரின் மறைவு தனிமனித மறைவு கிடையாது தூண் சாய்வது போல என கூறியிருக்கிறார்.

மேலும் அவர், என்னாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும் கழக தொண்டர்கள் மனதில் என்னாலும் ராஜா வாழ்ந்து கொண்டிருப்பார், வீரபாண்டியார் குடும்பத்திற்கும், கழக செயல் வீரர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment