சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..?
தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர் செய்த மோசமான காரியம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“உணவே மருந்து’ என்று அனுபவத்தில் அனைவரும் படித்திருப்போம். தினந்தோறும் நாம் உண்ணும் மூன்று வேளை உணவுகளில் அதிகம் விரும்புவது காய்கறிகள்தான். இயற்கையான சத்துக்கள் பல்வேறு காய்கறிகளிகளையே சுத்தம் செய்யாமல் உணவிற்கு பயன்படுத்தினால் வயிற்றுவலி அல்லது உடல் உபாதை ஏற்படக்கூடும். மனித வாழ்க்கையில் அடிப்படை சுகாதாரம் மிக முக்கியமாக விளங்குகிறது. இதை தவிர்க்கும் வகையிலும் காய்கறியை உண்ணால் நோய் வரும் என்பதுபோல் ஒரு வியாபாரியின் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது. அதில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர் ஒருவர் தக்காளி, முள்ளங்கி, பீன்ஸ், கேரட், பாகற்காய் முட்டைகோஸ் போன்ற பல்வேறு காய்கறிகளை நடைபாதையில் திறந்து இருக்கு சாக்கடை கழிவு நீரில் கொட்டி நன்றாக மிதக்கவிட்டு அனைத்து காய்கறிகளையும் யாருக்கும் தெறியாமல் கருவி எடுத்து மீண்டும் தள்ளுவண்டியிலேயே வைத்து வியாபாரம் செய்கிறார்.
இதைப்பார்த்த பலரும் அந்த காட்சியை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனர். இந்நிலையில், உண்மை அறிந்த பொதுமக்கள் சிறிது நேரத்தில் வண்டியில் இருந்த காய்கறிகளை கோபத்துடன் அள்ளி கீழே வீசினர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை. இனி எங்கு காய்கறி வாங்கினாலும் வீட்டில் சுத்தம் செய்த பிறகே உணவுக்காக பயன்படுத்தவது மிக நல்லதாகும். கொரோனா வைரஸால் உலக நாடுகளே பயந்து போயுள்ள சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் மக்களை அச்சப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.