லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!!

Photo of author

By Savitha

லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் இருசக்கர வாகனமும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான.

தீ ஏற்பட்டு இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லோடு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த இருசக்கர வாகனம் சுமைதாங்கி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட தீ, லாரியின் முன் பகுதி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலை நடுவே தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, விபத்துக்கான காரணம் என்ன? உயிரிழந்த இளைஞர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.